ஜனாதிபதியின் பதவிக் காலம் 2020 இல் நிறைவு | தினகரன்

ஜனாதிபதியின் பதவிக் காலம் 2020 இல் நிறைவு

 

தனது பதவிக் காலம் 05 வருடங்களில் நிறைவடைவதாக, ஜனாதிபதியினால் கோரப்பட்ட கருத்து தொடர்பில் உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐவர் கொண்ட குழுவொன்று கடந்த 09 ஆம் திகதி நியமிக்கப்பட்டு அக்குழுவினால் நேற்றைய தினம் (14) குறித்த முடிவு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குழுவில், பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஈவா வனசுந்தர, புவனகே அலுவிஹார, கே.ரி. சித்ரசிறி, சிசிர டி அப்ரூ ஆகியோர் அங்கம் வகித்தனர்.

அதற்கமைய 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உச்சபட்சமாக எதிர்வரும் 2020 ஜனவரி மாதம் வரை ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...