மலே'pய விமானத்தினுடையதென நம்பப்படும் மற்றொரு பாகம் ரியுனியன் தீவில் கண்டுபிடிப்பு | தினகரன்

மலே'pய விமானத்தினுடையதென நம்பப்படும் மற்றொரு பாகம் ரியுனியன் தீவில் கண்டுபிடிப்பு

 இந்திய பெருங்கடல் தீவான ரியுனியனில் விமானத்தினு டையது என்று சந்தேகிக்கப்படும் இரண்டாவது பாகம் ஒன்றும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன எம்.எச்.370 வினாத்தினுடையது என்று சந்தேகிக் கப்படும் விமானப் பாகம் ஒன்று கடந்த புதனன்று கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் ஆளுகையில் இருக்கும் அந்த தீவின் சென் டனிஸ் நகரின் தென்பகுதியில் விமானத்தின் கதவு பாகம் என்று நம்பப்படும் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாகத்தில் ஏதோ எழுதப்பட்டிருப்பதாகவும் சில குறியீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோலாலம்பூரில் இருந்து பீஜpங் நோக்கி கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயணித்த மலே'pய விமானமே நாடுவா னில் மாயமானது. அந்த விமானத்தில் 239 பேர் இருந்தனர்.

இந்நிலையில் ரியுனியன் தீவில் கரையொதுங்கிய முதல் பாகம் மேலதிக ஆய்வுகளுக்காக பிரான்ஸ{க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த பாகம் டுலுஸ் நகரில் ஆய்வு நடத்தப்பட்டு அது எம்.எச்.370 விமானத்தினுடையதா என்பது கண்டறியப்படவுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட அந்த பாகம் போயிங் 777 விமானம் ஒன்றின் சிறகுப் பகுதியின் ஒரு பகுதி என்று நம்பப்படு கிறது. எம்.எச்.370 விமானமும் இதே ரக விமானமாகும்.

2013இல் இருந்து மூன்று போயிங் 777 விமானங்கள் விபத் துக்குள்ளானபோதும் அவை மூன்றும் மாறுபட்ட வௌ;வேறு இடங்களிலேயே விபத்துக்குள்ளாயின. ஒன்று அமெரிக்காவில் விபத்துக்குள்ளானதோடு மற்றொன்று உக்ரைனில் விபத்துக்குள்ளா னது. இந்நிலையில் இந்திய பெருங்கடலில் எம்.எச்.370 விமானம் மாத்திரமே விபத்துக்குள்ளான ஒரே போயிங் 777 விமானமாகும்.

இந்நிலையில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட விமானத் தின் பாகம் போயிங் 777 விமானம் ஒன்றினுடையது என்பதை பிரான்ஸ் நிர்வாகம் மற்றும் அந்த விமானத்தை உற்பத்தி செய்த அமெரிக்க நிறுவனம் உறுதி செய்திருப்பதாக மலே 'pய போக்குவரத்து அமைச்சர் லியோ டியோங் லாய் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இதில் கடந்த புதன்கிழமை கண்டுபிக்கப்பட்ட விமானப்பாகம் இருந்த இடத்தில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலை விலேயே புதிய பாகம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அதேபோன்று ரியுனியன் தீவின் சென் அன்ட்ரே கடற் கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பயணப்பொதி ஒன்றின் சிதைவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள் ளது. வரும் புதன்கிழமையாகும்போது இது குறித்த முழு விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன விமானத்தை தேடும் அவுஸ்திரே லியா தலைமையிலான குழுவின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. அந்த குழு தென் இந்திய சமுத்திரத்தின் சுமார் 4000 கிலோமீற்றர் பகுதி யில் அவதானம் செலுத்தியுள்ளது. இது ரியுனியன் தீவில் இருந்து கிழக்காக சுமார் 6,000 கிலோமீற்றர் தொலை வில் காணப்படுகிறது.

பீPஜpங்கை நோக்கி செல்லவேண்டிய இந்த விமானம் திசைமாறி கடலில் விழுந்திருக்கக்கூடும் என்று நிர்வா கத்தினர் நம்புகின்றனர். எனினும் அவ்வாறு நிகழ்வதற் கான காரணம் ஏன் என்று தெரியவில்லை.

எனினும் அமெரிக்க உளவு நிறுவனம் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையில் விமான அறையில் இருந்த யாரேனும் விமானத்தை வேண்டுமென்றே திசைதிருப்பி இருப்பதாக ஊகம் வெளியிட்டிருந்தது.

விமானத்தில் இருந்து கிடைத்த ஒலி சமிக்ஞைகளை பயன்படுத்தி செய்மதிகளை ஆதாரமாகக் கொண்டே விமானம் கடைசியான இருந்த இடம் அனுமானிக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் ஓர் ஆண்டு கழிந்த நிலையிலும் இதுவரை உறுதி யான எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தமை குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக மலே'pய நிர்வாகம் கடந்த ஜனவரியில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.


Add new comment

Or log in with...