முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு 6 மாதங்களின் பிணை

 

தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஜூலை 12 ஆம் திகதி வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினரால்  கைதுசெய்யப்பட்ட டி.கே.பி. தசநாயக்க, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (09) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யதிலகவினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபர்களின் பிணை மனுவை விசாரித்த நீதவான்,, ஒரு சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா ரூபா ஒரு இலட்சம் ரொக்க பிணையிலும் ரூபா 10 இலட்சம் கொண்ட மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அல்லது விசாரணைகளுக்கு இடைஞ்சல் விளைவித்தால் பிணையை தள்ளுபடி செய்து மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

கடந்த 2008 - 2009 காலப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் 11 பேரை பலாத்காரமாக கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை தொடர்பில் குறித்த 6 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...