சுற்றுலா பஸ் விபத்து; 15 மாணவர்கள் காயம் | தினகரன்

சுற்றுலா பஸ் விபத்து; 15 மாணவர்கள் காயம்

 முன்பள்ளி சிறார்களுடன் சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று நேற்று (31) அதிகாலை பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் 15 சிறார்கள் உட்பட 35 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். உடதும்பர மகியங்கனை வைத்தியசாலைகளில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உடதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மகியங்கனை பிரதான பாதையில்

18 வது வளைவின் முதலாவது விளை விற்கு அருகில் நிகழ்ந்துள்ளது.

சாரதியினால் கட்டுப்படுத்த முடி யாத நிலையில் பாதையை விட்டு விலகிய பஸ் வண்டி இரும்பு கம்பத் தில் மோதி விபத்திற் குள்ளாகியுள் ளது.

பிபில பிரதேசத்தை சேர்ந்த முன்பள்ளி ஒன்றின் சிறார்கள், ஆசிரியைகள் பெற்றோர்களுடன் கொழும்பு பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று விட்டு பஸ் வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போதே இப் பஸ் வண்டி இவ்வாறு விபத்திற்குள் ளாகியுள்ளது. 

 

 


Add new comment

Or log in with...