கோத்தாபயவை கைது செய்ய டிச. 06 வரை இடைக்கால தடை | தினகரன்

கோத்தாபயவை கைது செய்ய டிச. 06 வரை இடைக்கால தடை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) குறித்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது.

பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால், பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி குறித்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிரதாக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கும் வகையில் உத்தரவொன்றை வழங்குமாறு கோரி, கோதாபய ராஜபக்‌ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (28) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன், குறித்த சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து, பிணை வழங்காது தடுத்துவைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியத்தை அமைப்பதற்காக அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...