காலி கின்தோட்டையில் அமைதியின்மையை அடுத்து ஊரடங்கு | தினகரன்

காலி கின்தோட்டையில் அமைதியின்மையை அடுத்து ஊரடங்கு

 

காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கின்தோட்டை பகுதியில் ஏற்பட்ட அமைதி இன்மையை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய அங்கு இருநூறிற்கும் அதிகமான பொலிஸாரும், 100க்கும் அதிகமான விசேட அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இடம்பெற்றுள்ள ஒட்டுமொத்த சம்பவங்களின் அடிப்படையில் 07 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலைமை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட,
வெலிபிட்டிமோதர, மஹ ஹபுகல, ருக்வத்த, கின்தோட்டை (கிழக்கு மற்றும் மேற்கு), பியதிகம, குருந்துவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, இது நாளை காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் ஒரு சில வீடுகள் மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...