பல பில்லியன் பேரின் இறுதி மரியாதையுடன் அப்துல் கலாம் | தினகரன்

பல பில்லியன் பேரின் இறுதி மரியாதையுடன் அப்துல் கலாம்

முன்னாள் இந்திய ஜனாதிபதி, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமை வழியனுப்பிவைக்கும் நிகழ்வில் அவர் பிறந்த தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

பெய் கராம்பு மைதானத்தில் இந்தியக் கொடியால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உடலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளை உயர்த்தி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது உடலை ஒரு முறை வலம் வந்தார்.

நாடு முழுவதும் இருந்து ஜனாதிபதி கலாமை நேசித்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இறுதி மரியாதையை செலுத்த வந்தனர். ராமேஸ்வரம் ஒரு நெடுஞ்சாலை வழியாக கால்நடையாக மற்றும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் படகுகளில் கூட வந்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த பலர் நேற்றிரவு சாலைகளிலும் தூங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை, டாக்டர் கலாமின் உடல், அவரது கிராமத்திலுள்ள வீட்டிலிருந்து ஒரு கலசத்தில் வைக்கப்பட்டு இறுதிக் கடமைகளுக்காக வீதி முழுவதும் மக்கள் நிரம்பிய வீதியில் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது.


அப்துல் கலாமின் மூத்த சகோதரனாகிய 99 வயதான முகமது முத்து மீராலெப்பை மரிக்கார் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய ஏவுகணை மனிதன் என்று அறியப்பட்ட டாக்டர் கலாம் அவர்கள் 1998 இல் நடத்தப்பட்ட பொக்ரான் - 2 அணு சோதனைககளில் முக்கிய பங்கு வகித்தவர். டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்


Add new comment

Or log in with...