புறக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணப் பொதிக்குள் பெண்ணின் சடலம் | தினகரன்

புறக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணப் பொதிக்குள் பெண்ணின் சடலம்

   கொழும்பு புறக் கோட்டை பெஸ்டி யன் மாவத்தை அநு ராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப்பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர்.

பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து பயணப்பை ஒன்றை திறந்து பார்த்த வியா பாரி ஒருவர் அதில் சடலம் இருப்பதைக் கண்டதும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

கொழும்பு பெஸ்தியன் வீதியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் சடலமொன்று இருப்பதாக பொலிஸா ருக்கு அறிவித்ததுடன் பொலிஸார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து பரிசோதனையும், விசாரணைகளையும் செய்து சடலத்தை பொலிஸ் பொறுப்புக்கு எடுத்தனர். அதன் பின்னர் புதுக்கடை மஜிஸ்திரேட் குறித்த இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனையை செய்துள்ளார்.

குறித்த பெண்ணின் கழுத்தில் தங்கச் சங்கிலி ஒன்று இருந்ததாகவும் தெரிவிக்கின்ற பொலிஸார், சுமார் 28 வயது மதிக்கத்தக்க இந்தப் பெண் பச்சை நிற டீசேட்டும், நீல நிற உள்ளாடையும் அணிந்திருந்ததாக தெரிவித்தனர்.

பெண்ணின் மூக்கில் இரத்தம் கசிந்திருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார், இந்தப் பெண்ணின் சடலத்தை மூன்று அடி நீளமானதும் இரண்டு அடி அகலமானதுமான பயணப் பொதியினுள் இரண்டாக முறித்து மடிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு பொதியின் சிப் இறுக்கமாக மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்தப் பையினுள் சடலத்துடன் பெண்கள் அணிகின்ற ஆடைகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள சவச்சாலைக்கு மேலதிகப் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை இந்தச் சடலம் யாருடையது என்பது பற்றிய விபரம் அறிய முடியவில்லை. எனவே இந்தப் பெண்ணை இனங்காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர். கொழும்பு வாழைத்தோட்ட பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 


Add new comment

Or log in with...