தேசிய வலைப்பந்து பயிற்சியாளராக | தினகரன்

தேசிய வலைப்பந்து பயிற்சியாளராக

திலகா ஜினதாச தெரிவு

இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட பயிற்சியாளராக தற்போது புர்ணை அணியின் பயிற்சியாளராக இருக்கும் திலகா ஜினதாச நியமிக்கப்பட்டிருப்பதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி பதவி வெற்றிடத்துக்காக இவரின் பெயரை அமைச்சரின் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வலைப்பந்தாட்ட பயிற்சியாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை விளையாட்டு அமைச்சு சார்பில் சஜித் ஜயலாலின் மேற்பார்வையில் வலைப்பந்தாட்ட சங்கத் தலைவி டிரன்சி நாயணக்கார, விமலா ஜயவீர, டொக்டர் லக்ஷ்மன் எதிரிவீர ஆகிய மூவரடங்கிய குழுவினரால் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இப்பதவி தெரிவுக்காக இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஹயசின் விஜேசிங்க, திலகா ஜினதாச மற்றும் விண்ணதாரிகளுக்கும் கடும் போட்டிநிலவியதாகவும், தேசிய. சர்வதேச அளவில் திறமையை கருத்தில் கொண்டே பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேற்படி பதவிக்காக அமைச்சரிடம் பரிந்துரைக்கப்படடுள்ள தற்போதைய புர்ணை பயிற்சியாளரான திலகா ஜினதாச நேர்முகப்பரிட்சைக்கு ஸ்கைப் தொழிநுட்பத்தினூடாகவே கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரமுகப் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெறவிருந்தாலும் பயிற்சியாளர் தெரிவுக்கான சட்டதிட்டங்கள் அடங்கிய கோவை அமைச்சுக்கு கையளிக்காத காரணத்தினால் பிற்போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...