கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து | தினகரன்


கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து

இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளதன் காரணமாக இலங்கையின் பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் தகுதி, கீதா குமாரசிங்கவிற்கு இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்று (02) இடம்பெற்ற குறித்த நீதிமன்ற அமர்வில் சட்ட மா அதிபர் உள்ளிட்ட ஐவர் கொண்ட நீதிபதிகளின் தீர்ப்பை, சிசிர எ அப்ரு, அனில் குணரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகளால் அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் கடந்த மே மாதம் 03ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றினால் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனையடுத்து, குறித்த தீர்ப்புக்கு எதிரதாக கீதா குமாரசிங்கவினால் உச்ச நீதிமன்றில்  மேன் முறையீடு செய்ப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கீதா குமாரசிங்க வெற்றிப்பெற்றிருந்தார்.

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்ற கீதா குமாரசிங்கவுக்கு இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிடவோ பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கவோ முடியாது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளை தொடர்ந்து  கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான விஜித மலல்கொட மற்றும் நீதிபதி பிரீத்திப பத்மன் சுரேசன ஆகியோரின் தலைமையின் கீழ் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் முடிவை  அறிவித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ள விடயத்தினை நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதோடு, சபாநாயகர் அதனை இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய மற்றும் கீதா குமராசிங்க அங்கம் வகிக்கும் கட்சியின் செயலாளருக்கும் அறிவிக்கவுள்ளார்.

அதற்கமைய, காலி மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலின் அதி கூடிய வாக்குகளை பெற்ற, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, அவரது இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Add new comment

Or log in with...