‘Windows 10’ ஐ வெளியிட்டது மைக்ரோசொப்ட்

மிக நீண்ட காலமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 பதிப்பு, உலகளாவிய ரீதியில் இன்று (29) வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதிப்பு, ஏற்கனவே விண்டோஸின் 7, 8, 8.1 ஆகிய பதிப்பைக் கொள்வனவு செய்தோருக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்பதோடு, வருடந்தம் அதற்கான சந்தாவை செலுத்துவதன் மூலம் மீள்புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.[[{"type":"media","view_mode":"media_large","fid":"2577","attributes":{"alt":"","class":"media-image","height":"480","style":"font-size: 13.0080003738403px; line-height: 1.538em; width: 435px; height: 480px; float: right;","typeof":"foaf:Image","width":"435"}}]]

இப்பதிப்பினை நேரடியாக இணையத்தின் மூலம் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளும் வகையில் வழியமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்காக முற்கூட்டிய பதிவு அவசியம் என மைக்ரோசொப்ட் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்படி முதலில் பதிவு செய்தோருக்கு முதலில் தரவிறக்கம் செய்வதற்கான அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்து. ஏனையோர் படிப்படியாக ஒரு சில நாட்களில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்டோஸ் 8 இனது முகப்பை சற்று வித்தியாசமாக வடிவமைத்துள்ள இப்பதிப்பு கிட்டத்தட்ட விண்டோஸ் 8 இனை ஒத்ததாகக் காணப்படுகின்றது. ஆயினும் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியுள்ள விண்டோஸ் நிறுவனம் தனது இணைய உலாவியான இன்டர்நெற் புரோசருக்கு விடைகொடுத்துள்ளது. அதற்கு பதிலாக எட்ஜ் இனை அறிமுகம் செய்துள்ளது.


There is 1 Comment

Add new comment

Or log in with...