கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிப் பகிஷ்கரிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை ஊழியர்கள் இன்று (29) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை நடாத்தினர்.

தாம் எதிர்கொள்ளும் பல்வேறு கோரிக்கைகளை வைத்து நடாத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு உரிய பதிலை வழங்காததால் தாங்கள் இப்பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டதாக, தாதியர் கூட்டு சங்கம், மருத்துவ துணை தொழிலாளர்கள் (PSM) மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என்பவற்றின் தலைவர் சமன் ஜயசேகர தெரிவித்தார்.

தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் இப்போராட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தோம். ஆனால் உரிய அதிகாரிகள் அமைச்சருடன் எட்டிய உடன்பாட்டை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...