ஐ. ம. சு. மு. தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு: சு. க. முக்கியஸ்தர்கள் பங்கேற்கவில்லை | தினகரன்


ஐ. ம. சு. மு. தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு: சு. க. முக்கியஸ்தர்கள் பங்கேற்கவில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்கவில்லை என அறிய வருகிறது.

கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் டி. எம். ஜெயரத்ன, எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, இரத்தினபுரி மாவட்ட ஐ. ம. சு. மு. முதன்மை வேட்பாளர் ஜோன் செனவிரத்ன, கண்டி மாவட்ட முதன்மை வேட்பாளர் எஸ். பி. திசாநாயக்க, காலி மாவட்ட முதன்மை வேட்பாளர் பியசேன கமகே உட்பட பல முக்கிய தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமானவர்களே கட்சி தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என தெரிய வருகிறது.

தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வுக்கு முன் கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐ. ம. சு. மு. முக்கியஸ்தர்கள் தேர்தல் விஞ்ஞா பனத்தை கையளித்திருந்தனர்.

ஜனாதிபதி மாலைதீவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் முன்னாள் ஜனாதிபதியும் ஐ. ம. சு. மு. தேர்தல் பிரசார குழு தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலே தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வு கொழும்பு ஹென்றி பேதிரிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

 

 


Add new comment

Or log in with...