போதைவஸ்து கடத்தல் முக்கியஸ்தரை பிடிக்க இன்டர்போல் உதவி

பல வருடகாலமாக பாகிஸ்தானி லிருந்து உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் ஹெரோயின் கண்டேனர் அனுப்பி வருகின்ற போதைவஸ்து வலையமைப்பின் தலைவரை இனம் கண்டுள்ள போதைவஸ்து தடுப்பு பிரிவு அவரது முக்கியமான இலங்கை முகவரையும் மூன்று பிரதி முகவர்களையும் அந்த வலையமைப்புடன் தொடர்புடைய இருபது பேரையும் கைது செய்துள்ளது.

பிரபல்யமான திரைப்படத் தயாரிப்பாளராக செயற்படும் இவர் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய புள்ளிகளின் பாராட்டை பெற்றுள்ள இலங்கை முஸ்லிம் இனத்தவரான இந்த சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வருகின்ற மொஹமட் முபாரக் மொஹமட் முஜட் என்பவரை உடனடியாக கைது செய்து இந்த நாட்டுக்கு கொண்டு வந்து தருமாறு இலங்கை பொலிஸார் சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.

செல்வம் மற்றும் பராவர்த்தனய போன்ற பிரபல்யமான திரைப்படங்களை தயாரித்துள்ள இந்த சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் தலைவர் அந்த திரைப்படங்களின் மூலம் கிடைத்த பணத்தை கூட பெற்றுக்கொள்ளவில்லையாம்.

இவர் இரகசியமாக இந்த நாட்டுக்கு வந்திருந்தால் உரிய பெயரில் இந்த நாட்டுக்கு வந்ததற்குரிய ஆதாரம் எதுவும் இல்லை என்றும் பல வருடங்களுக்கு முன் அவர் இந்த நாட்டை விட்டுச் சென்று இந்த ஹெரோயின் விற்பனையை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவர் தற்போது மலேசியாவில் சுகபோகம் அனுபவித்து வருவதாகவும் இவரை பிடிப்பதற்கு அவர் இருக்கின்ற பகுதியை சுற்றி மலேசியா பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இன்னும் இரண்டு தினங்களுக்கு முன் இவர் கைது செய்யப்படுவார் என போதைவஸ்து தடுப்பு பிரிவு நம்பியுள்ளது. 


Add new comment

Or log in with...