தாஜுடீன் கொலை: முழுமையான பிரேத பரிசோதனைக்கு நீதவான் உத்தரவு | தினகரன்

தாஜுடீன் கொலை: முழுமையான பிரேத பரிசோதனைக்கு நீதவான் உத்தரவு

றகர் விளையா ட்டு வீரர் தாஜுடீ னின் மரணம் தொடர்பாக முழு மையான பிரேத பரிசோதனை யொன்றை மீண்டும் நடத்தி அறிக்கை சமர்ப் பிக்குமாறு கொழு ம்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் நேற்று (28) நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு உத்தரவிட்டார்.

விசேட வைத்திய குழுவின் கூற்றுக்கமைய தாஜுடீனின் மரணம் கொலை என தகவல்கள் தெரிவிப்பதால் மீண்டும் ஒருமுறை பிரேத பரிசோதனை செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து மரண விசாரணை அறிக்கையில் (42) சுகாதார பகுதியை முழுமைப்படுத்தி பெற்றுத் தருமாறு நீதிமன்ற வைத்தியருக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்திடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...