ஐ. ம. சு. மு விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு | தினகரன்

ஐ. ம. சு. மு விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நேற்று (28) கையளிக்கப்பட்டது.

எதிர்காலத்திற்கான உத்தரவாதம் என்ற கருப்பொருளில் அமைந்த இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் நேற்று கையளித்தனர்.

இத் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் எவ்வாறு திட்டங்களையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் அமுல்படுத்தும் என்பதனை விபரிக்கின்றது. திட்ட அமு லாக்க வழி முறைகள் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஒரு நீண்ட கலந்துரையாடலையும் மேற் கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் விஞ்ஞாபனத்தின் தமிழ் மற்றும் சிங்கள பிரதிகளை முறையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களான திலான் பெரேரா, தினேஷ் குணவர்தன, பேராசிரியர் திஸ்ஸவிதாரன, ஏ. எச்.எம். பெளசி டி. யூ. குணசேகர, பிரபா கணேசன் மற்றும் டளஸ் அகலப்பெரும ஆகி யோரும் இங்கு பிரசன்னமாகியுரிந்தனர்.


Add new comment

Or log in with...