சு.கவிலிருந்து இடைநிறுத்தம் | தினகரன்

சு.கவிலிருந்து இடைநிறுத்தம்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணை ந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேர் கட்சியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப் பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சித் தலைவர் என்ற வகையில் உள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஐவரது கட்சி உறுப்புரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எஸ்.பி. நாவின்ன, எம்கே.டீ.எஸ். குணவர்தன, அர்ஜுன ரணதுங்க மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோருக்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி யாப்பையும் கட்சி ஒழுங் கையும் மீறும் வகையில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதாக இவர் களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட் டுள்ளது.

மோசடி மற்றும் திருட்டுடன் தொடர்பு டையவர்களுக்கு ஐ.ம.சு.மு. பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இவர்கள் அண்மையில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தி ருந்தனர்.

ஐ.தே.க.வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு ஐக்கிய தேசிய முன்ன ணியில் ஐவரும் போட்டியிடுவது தெரிந்ததே.

இதன் படி ராஜித சேனாரத்ன களுத் துறை மாவட்டத்திலும், ஹிருணிகா பிரேமசந்திர கொழும்பு மாவட்டத்திலும், அர்ஜுன ரணதுங்க கம்பஹா மாவட் டத்திலும், எஸ்.பி. நாவின்ன குருநாக லையிலும், எம்.கே.டீ.எஸ். குணவர்தன திருகோணமலை மாவட்டத்திலும் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடு கின்றனர்.

இவர்களை மத்திய குழுவில் இருந்து நீக்குமாறு சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினர் தொடர்ந்து கோரிவந்தனர். 


Add new comment

Or log in with...