இனவாதம், ஊழல்களை ஒழிக்கவே அரசியலில் களமிறங்கினேன் | தினகரன்

இனவாதம், ஊழல்களை ஒழிக்கவே அரசியலில் களமிறங்கினேன்

 இனவாதம் ஊழல் துஷ்பிரயோகம், சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளை இல்லாதொழிப்பதற்கே அரச துறையி லிருந்து விலகி தேர்தலில் குதித்துள்ளதாக ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் பரணவிதான தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தனது தந்தையும் ஒரு தொழிற்சங்க ஆர்வலர் தந்தையுடனான தமிழ், முஸ்லிம் நண்பர்களின் தொடர்பு, தன்னிலும் செல்வாக்கு செலுத்தியது இதன் காரணமாக சிறுபான்மை மக்கள் பற்றி எனக்கு அதிகூடிய அக்கறை உண்டு. நான் பிறந்து வளர்ந்த

சூழலின் அமைப்பும் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வக்கிரத்தனத்தை என்னுள் இருந்து அகற்றிவிட்டது.

பாடசாலைக் காலத்தை தொடர்ந்து பல்கலைக்கழகம் அதற்குப் பின்னர் பணிபுரிந்த துறைகளில் தனக்கிருந்த தமிழ், முஸ்லிம் நண்பர்களின் உறவு பொதுவாக மலையகம், கொழும்பு, யாழ். வடபுலத்திலும் தமிழ் மக்களுடனும், தமிழ் பேசும் நண்பர்கள், இளைஞர்களுடன் பணிபுரிய கிடைத்த சந்தர்ப்பங்களிலும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கும், பிரிவினைகளுக்கும் அப்பால் ஐக்கியமாகவும், சமாதானமாகவும் பரஸ்பர நல்லெண்ணத் துடனும் பணிபுரியக் கிடைத்தமை பெரும் திருப்தியையும், மன நிறைவையும் தருகின்றது.

மிக நீண்டகாலமாக இரத்தினபுரி பிரதேச தமிழ் மக்கள் பொதுவாக தமிழ் பேசும் மக்கள் கடந்த 40-45 வருட காலமாக கடந்த கால அரசியலில் புறந் தள்ளப்பட்டே வந்துள்ளனர். இவர்களுக்கான முக்கிய தேவைகளை சரியாக இனங்காண அரசியல்வாதிகள் தவறியுள்ளனர். எனவே இக்குறைபாடுகளை நான் பூர்த்தி செய்வேன். கனடா டொரண்டோவில் கொண்சல் ஜெனரலாக பணிபுரிந்த காலத்தில் தமிழ் மக்கள் தம்முடன் மிக நெருக்கமாக பழகி சர்வதேச அரங்கிலும் என்னுடன் இணைந்து செயல்பட்டனர்.

மேலும் எதிர்வரும் காலங்களிலும் நல்லாட்சியை முன்கொண்டு சென்று தமிழ், முஸ்லிம்களின் கல்வி, அடிப்படை வசதிகள், சமூக சமவாய்ப்பு, கெளரவம், தேசியப் பொருளாதார சமவுடைமை, இளைஞர் தொழில்துறை அரச, தனியார் துறைகளில் அவர்களுக்கான பங்குகளை சரியாக அடைந்துகொள்ள ஜனாதிபதியுடன் இணைந்து ஒரு நல்லாட்சி அரசினை அமைத்து சகல மக்களும் சந்தோசமாக வாழ மக்கள் வழி ஏற்படுத்த வேண்டும்.


Add new comment

Or log in with...