இனப்பிரச்சினை தீர்வுக்கு உண்மையை கண்டறியும் விசேட ஆணைக்குழு | தினகரன்

இனப்பிரச்சினை தீர்வுக்கு உண்மையை கண்டறியும் விசேட ஆணைக்குழு

 புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் அதேவேளை தென்னாபிரிக்காவைப் போன்று உண்மையை கண்டறியும் ஆணைக்குழு வொன்றும் உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட உள்ளூர், சர்வதேசத்தினதும் நம்பிக்கையை பெற்றதாக இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமையும் என்றும் இது தொடர்பாக தென்னா பிரிக்காவுடன் பேச்சு நடத்த இருப்பதாகவும் பிரதமர் ரணில் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தினகரனுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான அறிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை சமர்ப்பிக்க இருக்கிறது. இதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. அதற்கு நாம் முகம்கொடுக்க வேண்டும்.

கடந்த அரசு இதனை சரிவர அணுகாத காரணத்தினாலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

எமது நாட்டின் சட்ட வரையறைக்குள் உள்ளக விசாரணையொன்றை ஏற்படுத்துவது தான் எமது நோக்கம். உள்ளக விசாரணைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை இல்லை என்று கூறுவது சரிதான். குறிப்பாக மூதூர் சம்பவம் போன்ற வற்றிலும் நம்பிக்கையை இழக்க நேரிட்டது.

எனவே, தேசிய, சர்வதேச மட்டங்களில், நம்பிக்கையை பெற்றதாக விசாரணை அமைய வேண்டும். உள்ளக விசாரணைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கையில்லை யெனின் அவர்களது ஆலோசனைகளை பெற்று உண்மையை கண்டறிவத ற்கான குழு அமைக்கப்படும் என்றார். இது தொடர்பாக கூட்டமைப்புடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது.

யுத்தத்தை வெல்வதாக இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு கடந்த அரசு உத்தரவாதம் வழங்கியது எனினும் அந்நாடுகளின் ஆலோசனை களை பின்பற்றுவதாக வழங்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டிருந்தன. இதனாலேயே இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

கடந்த அரசு முன்னெடுத்து வந்த அபிவிருத்திப் பணிகளை ரணில் தலைமையிலான அரசு நிறுத்திவிட்டதாக ராஜபக்ஷ அணியினர் குற்றம் சுமத்து வதையும் பிரதமர் நிராகரித்தார்.

வடபகுதியில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பேசிய பிரதமர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 1000 ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக மேலும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பி ட்டார். மீளக்குடியேறும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக வடமாகாண சபையும் மீள்குடியேற்ற அமைச்சும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 


Add new comment

Or log in with...