இலங்கைக்கு உலக புகையிலை எதிர்ப்பு தின விருது

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2015 இல் உலக சுகாதார அமைப்பினால் தெற்காசிய வலையத்திற்கான பிரிவில் இலங்கைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விருதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பெற்றுக்கொள்ளவுள்ளார்.

புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பில் அக்கறை கொண்ட தனிநபர் அல்லது நிறுவனத்தினை கௌரவிக்கும் வகையில் வருடா வருடம் உலக சுகாதார அமைப்பிலுள்ள (WHO) ஆறு வலயங்களை அடிப்படையாக வைத்து ‘உலக புகையிலை எதிர்ப்பு தின’ விருது வழங்கல் வைபவம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் WHO பணிப்பாளர் நாயகத்தின் விசேட விருது, உலக புகையிலை எதிர்ப்பு தின விருது மற்றும் உலக புகையிலை எதிர்ப்பு தின விருது 2015, இரு WHO பணிப்பாளர் நாயகத்தின் விசேட சான்றிதழ்கள் எனும் அடிப்படையில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.
 


Add new comment

Or log in with...