அவன்கார்ட், ரக்னா லங்கா தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகை | தினகரன்


அவன்கார்ட், ரக்னா லங்கா தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகை

 
அவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
தெற்கு கடல் பரப்பில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை அமைக்கும் பொருட்டு ரூபா 355 இலட்சம் ரூபா இலஞ்ச கொடுக்கல் வாங்கல் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த இருவர் மீதும் குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
இன்றைய தினம் (03) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் குறித்த குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
 
இதன்போது, குறித்த இருவரும் தலா ரூபா ஒரு இலட்சம் ரொக்கம், மற்றும் தலா ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
 
குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதோடு, எதிர்வரும் மார்ச் 19 - 22 வரையான நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதவான் அறிவித்தார்.
 

Add new comment

Or log in with...