வெளியாகவிருந்த விஞ்ஞாபனம் ஜோதிடர்களால் மாற்றம் | தினகரன்

வெளியாகவிருந்த விஞ்ஞாபனம் ஜோதிடர்களால் மாற்றம்

ஐ.ம.சு.முவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (27) வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது நாளை (28) காலை 9.00 மணிக்கே வெளியிடப்படும் என ஶ்ரீ.ல.சு.கவின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜோதிடர்கள் குறிப்பிடதற்கமையவே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சகல இனங்களையும் கவரும் வகையிலான பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை உள்ளடக்கியதாக அமையவுள்ள இந்த விஞ்ஞாபனம் ஹென்றி பேதிரிஸ் அரங்கில் வெளியிடப்படவுள்ளது. ‘நாட்டை மீள்நிர்மாணித்து – புதிதாக ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ்விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
 


Add new comment

Or log in with...