10 வருடங்களுக்குப் பின் பாரிய மாற்றம்: தேர்தல் சட்டங்கள் முறையாக கடைப்பிடிப்பு

 அமைதி நிறைந்த இந்த தேர்தல் காலம் இங்கிலாந்தை நினைவுபடுத்துவதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேர்தல் சட்டங்கள் மிகச் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதுடன் அனைத்து அரசியல் வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளையும் தேர்தல் சட்டங்களுக்குக் கீழ்ப்படுத்த முடிந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பத்து வருடங்களுக்குப் பிறகு இந்தளவு சிறந்த நிலமை நாட்டில் நிலவுவதாகத் தெரிவித்த பிரதமர் பொலிஸாருக்கான உத்தரவுகளைத் தாமோ அல்லது ஜனாதிபதியோ பிறப்பிப்பதில்லை என்றும் தேர்தல் ஆணையாளரே அதனை நிறைவேற்றுகிறார் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அவிசாவளை தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அவிசாவளைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்றுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஹங்கவெல்லை நகரில் நடைபெற்றது.

அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விஜேதாச ராஜபக்ஷ, முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா உட்பட வேட்பாளர்கள் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

இலங்கையை தற்போது நாம் பார்க்கும் போது இங்கிலாந்தைப் போன்று காட்சியளிக்கின்றது. அமைதியும் மெளனமும் நிலவுகிறது. பத்து வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் எந்தளவு சிறந்தது என நாம் சிந்திக்க வேண்டும்.

இது ராஜபக்ஷ கால தேர்தலல்ல. எவரும் மோதிக்கொள்வதில்லை படுகொலைகளில்லை, கடை உடைப்புகளில்லை, எந்த வன்முறையும் இப்போது கிடையாது.

பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கும் வேலையையும் நானோ அல்லது ஜனாதிபதியோ மேற்கொள்வதில்லை. தேர்தல் ஆணையாளரே உத்தரவுகளை பிறப்பிக்கின்றார். தேர்தல் சட்டங்களை நாம் மிகச் சரியாகக் கடைப்பிடிக்கின்றோம்.

ஜனவரி 8ம் திகதி நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டது. அதன் இறுதிக்கட்டமாக இந்த நாட்டின் அனைத்து அரசியல் வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் தேர்தல் சட்டங்களுக்கு கீழ்ப்படுத்த முடிந்துள்ளது.

சட்டத்தின் ஆதிபத்தியம் சிறப்பாக நடைமுறையிலிருப்பதை இம்முறை தேர்தலில் காண முடிகிறது. இதற்கிணங்க ஜனவரி 8ம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதா அல்லது பின்னடைய செய்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 17ம் திகதி மக்கள் இந்த தீர்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 8ம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சி பின்னடைவைச் சந்திக்குமானால் நாட்டில் மீண்டும் வெள்ளை வேன் யுகமே உருவாகும். அப்படி நடந்தால் ராஜ குடும்பத்திற்கு மோட்சம் கிடைக்கும். அதேவேளை மக்களுக்கோ நரகமே கிட்டும். இலேசான நரகமல்ல மிக மோசமானதாக அது இருக்கும். ஏனெனில் அது ராஜபக்ஷவின் நரகமாகும்.

ஜனவரி 8ம் திகதி புரட்சி முன்னோக்கிச் செல்லுமானால் இந்த வெள்ளை வேனுக்கு இடமில்லை. நாட்டில் ‘குடு’ எத்தனோல் போன்றவற்றுக்கு இடமில்லை. பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகமும் இருக்க மாட்டாது.

அத்தோடு பொருளாதார முன்னேற்றம், தொழில் வாய்ப்பு, வருமான அதிகரிப்பு மற்றும் விவசாயம் உட்பட சகல துறைகளும் முன்னேற்றமடையும் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

எதிர்வரும் 60 மாதத்தில் புதிய நாட்டையும் புதிய கிராமங்களையும் புதிய மாற்றங்களையும் ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். எமது ஐம்பெரும் வேலைத்திட்டம் தேர்தல் விஞ்ஞாபனமாக இன்னும் சில தினங்களில் உங்கள் கைகளில் கிடைக்கும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். அவிசாவளை தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அவிசாவளைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்றுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஹங்கவெல்லை நகரில் நடைபெற்றது.

அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விஜேதாச ராஜபக்ஷ, முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா உட்பட வேட்பாளர்கள் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்ட இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

இலங்கையை தற்போது நாம் பார்க்கும் போது இங்கிலாந்தைப் போன்று காட்சியளிக்கின்றது. அமைதியும் மெளனமும் நிலவுகிறது. பத்து வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் எந்தளவு சிறந்தது என நாம் சிந்திக்க வேண்டும்.

இது ராஜபக்ஷ கால தேர்தலல்ல. எவரும் மோதிக்கொள்வதில்லை படுகொலைகளில்லை, கடை உடைப்பு களில்லை, எந்த வன்முறையும் இப்போது கிடையாது.

பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கும் வேலையையும் நானோ அல்லது ஜனாதிபதியோ மேற்கொள்வதில்லை. தேர்தல் ஆணையாளரே உத்தரவுகளை பிறப்பிக்கின்றார். தேர்தல் சட்டங்களை நாம் மிகச் சரியாகக் கடைப்பிடிக்கின்றோம்.

ஜனவரி 8ம் திகதி நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டது. அதன் இறுதிக்கட்டமாக இந்த நாட்டின் அனைத்து அரசியல் வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் தேர்தல் சட்டங்களுக்கு கீழ்ப்படுத்த முடிந்துள்ளது.

சட்டத்தின் ஆதிபத்தியம் சிறப்பாக நடைமுறையிலிருப்பதை இம்முறை தேர்தலில் காண முடிகிறது. இதற்கிணங்க ஜனவரி 8ம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதா அல்லது பின்னடைய செய்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 17ம் திகதி மக்கள் இந்த தீர்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 8ம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சி பின்னடைவைச் சந்திக்குமானால் நாட்டில் மீண்டும் வெள்ளை வேன் யுகமே உருவாகும். அப்படி நடந்தால் ராஜ குடும்பத்திற்கு மோட்சம் கிடைக்கும். அதேவேளை மக்களுக்கோ நரகமே கிட்டும். இலேசான நரகமல்ல மிக மோசமானதாக அது இருக்கும். ஏனெனில் அது ராஜபக்ஷவின் நரகமாகும்.

ஜனவரி 8ம் திகதி புரட்சி முன்னோக்கிச் செல்லுமானால் இந்த வெள்ளை வேனுக்கு இடமில்லை. நாட்டில் ‘குடு’ எத்தனோல் போன்றவற்றுக்கு இடமில்லை. பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகமும் இருக்க மாட்டாது.

அத்தோடு பொருளாதார முன்னேற்றம், தொழில் வாய்ப்பு, வருமான அதிகரிப்பு மற்றும் விவசாயம் உட்பட சகல துறைகளும் முன்னேற்றமடையும் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

எதிர்வரும் 60 மாதத்தில் புதிய நாட்டையும் புதிய கிராமங்களையும் புதிய மாற்றங்களையும் ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

எமது ஐம்பெரும் வேலைத்திட்டம் தேர்தல் விஞ்ஞாபனமாக இன்னும் சில தினங்களில் உங்கள் கைகளில் கிடைக்கும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Add new comment

Or log in with...