தங்காலையில் துப்பாக்கிச் சூடு: பாதாள முக்கியஸ்தர் உக்குவா பலி | தினகரன்


தங்காலையில் துப்பாக்கிச் சூடு: பாதாள முக்கியஸ்தர் உக்குவா பலி

 பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடச் சென்ற பிணையாளிகள் மூவர் மீது இனந்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந் துள்ளார்.

தங்காலையில் நடந்த இந்த சம்பவத்தில் ‘உகுக்குவா’ (38) என அழைக்க ப்படும் நபரே உயிரிழந்திருப் பதாக பொலிஸார் கூறினர்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்றுக்காலை 9.45 மணியளவில் இடம்பெற்றது.

தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு கையொப்பம் இடுவதற்காக முச்சக்கர வண்டியில் சென்ற பிணையாளிகள் மூவர் அங்கிருந்து திரும்பிச் செல்லும் வழியில் இத்துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்ற கார் திட்டமிட்டு முச்சக்கர வண்டி யை மோதி விபத்துக்குள் ளாக்கியது. இதன்போது முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.

பிணையாளிகள் மூவர் மீதும் காரில் வந்தவர்கள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில் ‘உக்குவா’ என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏனைய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகினர்.

அதனையடுத்து காரில் வந்தவர்கள் குறித்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

காயமடைந்த இருவரும் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அதே வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது.

‘உக்குவா’ என்றழைக்கப்படும் மேற்படி நபர் தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவரென பொலிஸார் கூறினர். இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...