ஒளடத கட்டுப்பாட்டு சபைத் தலைவருக்கு அதிரடிப் படை பாதுகாப்பு | தினகரன்

ஒளடத கட்டுப்பாட்டு சபைத் தலைவருக்கு அதிரடிப் படை பாதுகாப்பு

 தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டொக்டர் சமீர திலங்க சமரசிங்கவுக்கு இன்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது குறித்து ஜனாதிபதியின் கவ னத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இன்று முதல் அதற்கான ஏற்பா டுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். சிறிகொத்தாவில் நேற்றுக்காலை விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபைத் தலைவருக்கான அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு தீர்வு காணும் வகையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

போதைப் பொருள் வியாபாரிகளை கட்டுப்படுத்தும் பாரிய பொறுப்பு வகித்து வரும் தனக்கு உயிர் அச்சுறுத் தல் இருப்பதனால் பாதுகாப்புஅளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண் டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கை முன்வைக்கப்பட்டு நீண்ட நாளாகியும் தமக்குரிய பாதுகாப்பு வழங்கப்படாததையடுத்து தான் மிகவும் மனம் வருந்துவதாகவும் அவர் அண் மையில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர்மற்றும் பாதுகாப்புஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகிய மூவரும் டாக்டர் திலக்க சமரசிங்கவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்குவதற்கான அனுதியளித்திருந்தும் அரசாங்க உயரதிகாரியொருவரின் அதிருப்தி காரணமாகவே இதற்கான ஏற்பாடுகள் இழுபறிக்கு உள்ளாகியிருப் பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப் பட்டது.

மேலும் தனக்கு உயிரிழக்க நேரிட்டாலும் இந்த அரசாங்கத்தில், அரசாங்க அதிகாரிகளின் சுயாதீனமான செயற் பாட்டை நினைத்து மனம்மகிழ்வதாக வும் டாக்டர் திலங்க இச்சந்தர்ப்பத் தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.


Add new comment

Or log in with...