ஐ.ம.சு.மு., ஜே.வி.பி. முக்கியஸ்தர்கள் ஐ.தே.கவில் இணைவு | தினகரன்

ஐ.ம.சு.மு., ஜே.வி.பி. முக்கியஸ்தர்கள் ஐ.தே.கவில் இணைவு

 கண்டி, வத்தேகம நகரில் சனிக் கிழமை (25) நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் 14 பேருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கான உறுப்புரிமையை பெற்றுத்தந்தார்.

தகவல் ஊடகத்துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வின் இணைப்பு அதிகாரியான முன்னாள் பிரதேச சபை பிரதித் தலைவர் உப்புல் ரணவீர, முன்னாள் எம்.பி. கெஹெலியவின் பாணதும்பர இணைப்பாளர் வை.எம். நவரட்ண, முன்னாள் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எம். தர்மரட்ன, ஜே.வி.வியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் விமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரே ஐ.தே.க.வில் இணைந்து கொண்டவர்கள் ஆவர்.


Add new comment

Or log in with...