தமிழர்களின் ஜனநாயகப் பலத்தை சிதறடிக்கும் முகவர்கள் | தினகரன்

தமிழர்களின் ஜனநாயகப் பலத்தை சிதறடிக்கும் முகவர்கள்

 சர்வதேச ரீதியில் தமிழர்களின் ஒற்றுமை பெற்று வரும் அங்கீகா ரத்தை முறியடிக்கும் முயற்சிக்கு துணை போயுள்ள முகவர்கள் பல் வேறு திட்டங்களுடன் களமிறக்கப் பட்டுள்ளதாக திரு. சுமந்திரன் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் இளம் உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பொன்றில், யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரும் சிரேஷ்ட சட்டத் தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த மாகாண சபைத் தேர்தல், இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித் ததன் மூலம் ஜனநாயக பலத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனை சிதறடிக்கும் நோக்கில் தேசியம், அபிவிருத்தி, சலுகை போன்ற கோஷங்களுடன் முகவர்கள் கள மிறக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உரிய விழிப்புணர்வை மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வழங்க வேண்டியது இளம் மாகாண சபை உறுப்பினர்களின் பொறுப்பாகும் என்று சுமந்திரன் இச்சந்திப்பில் மேலும் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...