ஐக்கிய தேசிய முன்னணியுடன் மேலும் 75 அமைப்புகள் இணைவு | தினகரன்

ஐக்கிய தேசிய முன்னணியுடன் மேலும் 75 அமைப்புகள் இணைவு

 75 சிவில் அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒன்றியம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் நாளை 28 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணி சார்பிலும். சிவில் அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்களின் சார்பில் அவற்றின் தலைவர்களும் இதில் கைச்சாத்திடுவர். இலங்கை மன்றக் கல்லூரியில் முற்பகல் 9.30 மணிக்கு இது கைச்சாத்தாகும். பிரஜைகள் அமைப்பினதும், தொழிற் சங்க ஒன்றியத்தினதும் இணை அமைப்பாளர் சமன் ரத்னபிரிய இது பற்றித் தெரிவிக்கையில், 75 அமைப்புக்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைவதாகத் தெரிவித்தன.

நியாயமான சமூகத்துக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் சங். மாதலுவாவே சோபித தேரர் தலைமையில் ஐ. தே. முன்னணியும் இதில் கைச்சாத்திடும்.

நியாயமான ஜனநாயக அரசியலமைப்பு முறைமைக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன் 47 சிவில் அமைப்புக்கள் நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்தது.

அந்த நிகழ்ச்சி நிரலுடன் ஏனைய சமூக சக்திகளையும் இணைத்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாராவதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பைச் சேர்ந்த லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி முறையை ஒழித்தல், விருப்பு வாக்கு முறையை முற்றாக ஒழித்தல், சுயாதீன நீதிமன்றம் உருவாக்கம், தவறு செய்யும் நீதிபதிகளை பதவி விலக்கல்,சர்வதேச தரத்துக்கு ஏற்ப நீதிக் கட்டமைப்பை மேற்கொள்ளல்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமனம், பாராளுமன்ற மற்றும் மக்கள் பிரதிநிதிக ளுக்கு ஒழுக்க நெறிக் கோவை உருவாக் கம் உள்ளிட்ட 15 விடயங்களை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளடக்கி உள்ளன. (எப். எம்.)

 


Add new comment

Or log in with...