ஐ.ம.சு. முன்னணியை தோற்கடித்து விட்டே மஹிந்த ஓய்வு பெறுவார்

 ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.முவின் தோல்விக்கு காரணமாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலிலும் ஐ.ம.சு.முவை தோல்வியடையச் செய்துவிட்டே தனது பயணத்தை நிறுத்தவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஐ.ம.சு.முவின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஐ. ம. சு.மு. தோல்வியடையும் எனக் கூறியிருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் தோல்வியிலேயே முடியும் என்பது உறுதியாகியிருப்பதாக ஜே.வி.பியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.ஐ.ம.சு.முவில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த காலத்தில் நடந்துகொண்டதைப் போலவே நடந்துகொள்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சி ஆதரவாளர் ஒருவரையே தாக்கச் சென்றுள்ளார்.

இதற்கு பல்வேறு காரணங்களைக் கூறி மறைக்க முயற்சித்தாலும் உண்மை வெளியாகியுள்ளது. அதேபோல மஹிபால ஹேரத்தின் பாதுகாப்பு பிரிவினரின் வாகனத்தில் போதைப்பொருள் மீட்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஐ. ம. சு. மு. வேட்பாளர்களின் செயற்பாடுகளில் எதுவுத மாற்றமும் ஏற்படவில்லையென்றும் ரில்வின் சில்வா கூறினார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி

ஐ. ம. சு. முன்னணியினர் கூறி வரு கின்றனர். தேர்தலில் தோல்வியடையப் போகிறோம் என்பதை உணர்ந் திருப்பதாலேயே அவர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர்.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியும், ஐ.ம.சு.முவும் தேர்தல் காலங்களில் உறுதிமொழிகளை வழங்கும் வழமையான பிரசாரங்களையே முன்னெடுத்து வருகின்றன. இரு பிரதான கட்சிகளும் இலக்கொன்றை தெளிவாக அறிவித்து அதனைநோக்கி பயணிக்கும் போக் கொன்றைக் காண முடிய வில்லை. ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வுகள் எதனையும் காணமுடியா துள்ளதுடன், ஒருவர் மீது ஒருவர் வெறுமனே சேறு பூசும் வகையிலான பிரசாரங்களே முன்னெடுக்கப்படு வதாக அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பேசப்படும் கட்சியாக ஜே.வி.பி காணப்படுகிறது எனச் சுட்டிக்காட்டிய ரில்வின் சில்வா, ஜே.வி.பி முன்வைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள் வீணான குற்றச்சாட்டு க்களை சுமத்தி வருவதாகவும் கூறினார். 


Add new comment

Or log in with...