திருமலை பஸ்நிலையத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது | தினகரன்


திருமலை பஸ்நிலையத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது

 
திருகோணமலை, பொது போக்குவரத்து பஸ் நிலையத்தில் வைத்து இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் செய்யப்பட்டுள்ளனர். 
 
இன்று (14) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இருவரிடமுமிருந்தும் தலா 30 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
கொழும்பு மாளிகாவத்தையைச் 37 வயதான குடும்பஸ்த்தவர் ஒருவரும் அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவருமே  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
 
திருகோணமலை பிராந்திய நச்சுத் தன்மையான போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இவரை கைது செய்துள்ளனர்.
 
இந்த போதைப் பொருள் கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை,  திருகோணமலை தலைமை பொலிஸாரிடம் ஒப்படைதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
 
(கிண்ணியா மத்திய நிருபர் - கியாஸ்)
 

Add new comment

Or log in with...