பாகிஸ்தானை வென்றது WXI அணி; தொடர் 1-1 என சமனிலை | தினகரன்


பாகிஸ்தானை வென்றது WXI அணி; தொடர் 1-1 என சமனிலை

பாகிஸ்தான் அணி மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ணத் தொடரின் இரண்டாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் உலக பதினொருவர் அணி வெற்றி பெற்றது.

நேற்றைய தினம் (13) லாகூரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி 19.5 ஓவர்களில் ஒரு பந்து மீதமிருக்க 175 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது

இலங்கை அணி வீரர் திசர பெரேரா அதிரடியாக ஆடி, 5 ஆறு ஓட்டங்களுடன், 19 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இறுதி 5 ஓவர்களுக்கு 63 ஓட்டங்களை பெற வேண்டியிருந்த நிலையில் அதிரடியாக ஆடிய அவர், அவ்வணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

ஹசீம் அம்லா 72 (55)

போட்டியின் நாயகனாக திசர பெரேரா தெரிவானார்.

இத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளைய தினம் (15) லாகூரில் இடம்பெறவுள்ளது.


Add new comment

Or log in with...