பந்துல குணவர்தனவின் கருத்து தொடர்பில் CFIB வாக்குமூலம் | தினகரன்

பந்துல குணவர்தனவின் கருத்து தொடர்பில் CFIB வாக்குமூலம்

 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம், கொழும்பு பொலிஸ் மோசடி விசாரணை பணியக அதிகாரிகள் (CFIB) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
 
லொத்தர் சபை டிக்கட்டுகள் அச்சிடுவது தொடர்பில், பந்துல குணவர்தன தெரிவித்த கருத்துகள் சம்பந்தமாக குறித்த வாக்குமூலத்தை பெறுவதற்காக, இன்று (12) அவரது வீட்டுக்கு பொலிசார் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
 
லொத்தர் சபையினால், போலியான லொத்தர் டிக்கெட்டுகள் அச்சிடப்படுவதாக குற்றஞ்சாட்டி, அவர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில், தேசிய லொத்தர் சபையினால் CFIB யில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலேயே பொலிசார் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Add new comment

Or log in with...