நாடு துண்டாடுவதை தடுக்கவே ரணிலுடன் இணக்கப்பாடு | தினகரன்

நாடு துண்டாடுவதை தடுக்கவே ரணிலுடன் இணக்கப்பாடு

 நாடு துண்டாடப்படுவதை தடுப்பதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டோம். மஹிந்த ஆட்சியிலே நாட்டை துண்டாடும் பொறிமுறை கொண்டுவரப்பட்டதாக ஐக்கிய நல்லாட்சி தேசிய முன்னணி செயலாளர் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

ஹோமாகம பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டை துண்டாடும் ‘பெகேஜ்’ ஜை மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவங்ச ஆகியோருடன் தயாரிக்க ஜீ.எல்.பீரிஸ் நடவடிக்கை எடுத்தார். இதனை வீதியில் இறங்கிப் போராடி நாமே தோற்கடித்தோம். இதன் மூலமே நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டது.

நாட்டை துண்டாடும் நடவடிக் கையிலிருந்து நாட்டை பாதுகாக்கவே டிசம்பர் 10ம் திகதி நாம் மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்தோம். நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே பிரதமருடன் உடன்பாட்டை ஏற்படுத்தி னோம். எதிர்காலத்திலும் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

வடக்கு தேர்தலை பகிஷ்கரிப்பதற்காக 2005 ல் மஹிந்த ராஜபக்ஷ எமில்காந்தனுக்கு பணம் வழங்கினார். மஹிந்த ராஜபக்ஷ யதார்த்தமான தலைவர் என பிரபாகரன் கூட அவரை பாராட்டினார். பிரபாகரனுடன் பேச்சு நடத்த அவர் அழைப்பு விடுத்தார். ஜெனீவாயில் பேச்சு நடத்த திறைசேரியில் இருந்து பணம் வழங்கினார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இதுவரை 70 ஆயிரம் முறைப்பாடுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

அவற்றின் 42 முறைப்பாடுகள் குறித்தே விசாரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அவர்கள் நீதிமன்றத்தினூடாக குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவர். அதற்கு முன்னர் ஒகஸ்ட் 17ம் திகதி ஐ.தே.க.வுக்கு வாக்களித்து அவர்களை குற்றவாளிகளாக்கும் வாய்ப்பு மக்கள் நீதிமன்றத்திற்கு உள்ளது என்றார். 


Add new comment

Or log in with...