பொதுத் தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29ஆம் திகதி விநியோகத்து க்காக தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹ மட் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 10ஆம் திகதி வரை தபால் திணைக்களத்தால் வாக்காளர் அட்டைகள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்படவுள்ளது. ஓகஸ்ட் 2ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதி ஆகியன ஞாயிற்றுக்கிழமைகளாக இருக்கின்றபோதும் இரு தினங்களும் விசேட தினங்களாகக் கணிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை தபால் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
ஓகஸ்ட் 10ஆம் திகதிவரை அஞ்சல் மூலம் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்களுடன் சென்று தமக்கான அஞ்சல் நிலையத்தில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட சகலரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு உரித்துடைய வர்கள். ஏதாவது ஒரு காரணத்தினால் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் அட்டையுடன் சென்று வாக்களிக்க முடியும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையென்பது வாக்களிக்கச் செல்லும்போது பெயரை விரைவில் அடையாளப்படுத்துவதற்கானதே.
இது ஒரு சட்டபூர்வமான ஆவணம் அல்ல என்பதால் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தும் அட்டையுடன் சென்று வாக்களிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Add new comment