ஜனக பண்டார தென்னகோன் இராஜினாமா | தினகரன்

ஜனக பண்டார தென்னகோன் இராஜினாமா

 மாகாண சபை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தனது அமைச்சு பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை கவிதையாக எழுதி நேற்று ஜனாதிபதிக்கு வழங்கியதாக ஜனக பண்டார தென்னகோன் நேற்று தெரிவித்தார்.11 கவிதைகளுடன் கூடியதாக இந்த ராஜினாமா கடிதம் அமைந்துள்ளது. ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய உரையையும் ஐ.தே.க. செயற்பாடுகளையும் அடுத்து தான் பதவி விலக முடிவு செய்ததாக அவர் அறிவித்துள்ளார்.

தம்புளையில் உள்ள தனது வீட்டில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய அவர், சு.க. மத்திய குழுவின் தீர்மானத்தின்படி தான் அமைச்சு பதவி ஏற்றதாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக பதவி விலக முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

பதவி விலகுவதற்காக கட்சி மத்திய குழுவை கூட்டுமாறு தான் கோரியபோதும் அவ்வாறு மத்திய குழு கூட்டப்படாததால் இவ்வாறு பதவி விலக நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி எம்.பி.கள் 35 பேர் கெபினட் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். ஏற்கெனவே சீ. பி. ரத்னாயக்க, டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாரச்சி, மஹிந்த யாப்பா அபேவர்தன, திஸ்ஸ கரலியத்த, சுதர்சனி பெர்னாந்துபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்தன, லசந்த அலகியவன்ன ஆகிய 9 பேர் பதவி விலகியுள்ளனர்.

ஏனைய அமைச்சர்களும் பதவி விலகுவதற்காக மத்திய குழுவை கூட்டுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அடங்கலான குழுவினரும் ஜனாதிபதியை கோரியுள்ளது தெரிந்ததே.


Add new comment

Or log in with...