த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு | தினகரன்

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. யாழ்ப்பாணம் உடுவிலில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறும் கூட்டத்திலேயே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வுள்ளனர்.

இனப்பிரச்சினைத் தீர்வு, வடக்கின் இராணுவப் பிரசன்னம், ஜெனீவா அறிக்கை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டி ருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவி த்தன. பலாலி விமான நிலையத்தை சர்வதேச இறங்குதளமாக தரமுயர்த்து வது உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங் கள் குறித்தும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப் பதாகத் தெரியவருகிறது.


Add new comment

Or log in with...