வெள்ளை வானில் ஐ.ம.சு.மு வேட்பாளரின் போஸ்டர்கள் | தினகரன்

வெள்ளை வானில் ஐ.ம.சு.மு வேட்பாளரின் போஸ்டர்கள்

 இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிறிதொரு இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கெப் வாகனத்தில் இருந்து அநுராதபுரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஒருவரின் 4500 போஸ்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெபிதிகொல்லாவ - கொன்கொல்லாவ பிரதேசத்தில் வைத்து நேற்று அதிகாலை 2.20 மணிக்கு குறித்த கெப் வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பரகஸ்வெவ்வெவ பகுதியில் வசிக்கும் ஒருவரது பெயரில் குறித்த கெப் பதிவு செய்ய ப்பட்டுள்ளது. இராணுவ இலக்கத் தகடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கஹடகஸ்திகிலிய மற்றும் மதவாச்சி பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 44 வயதுடைய நபர்களே கைது செய்யப் பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...