15 வருடங்களின் பின்னர் 5 பேருக்கு மரண தண்டனை

 சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் லிந்துலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் சுப்பையா மாரிமுத்து என்பவரை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபர்கள் 8 பேரில் 5 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்கா நேற்று 24 ஆம் திகதி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி லிந்துலை பொலிஸ் பிரிவிலுள்ள கிறேட் வெஸ்டன் தோட்டத்தில் இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2000 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இவ்வாறு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய 8 பேர் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதில் 3 பேர் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 24.07.2015 அன்று ஆஜராகியிருந்த கிறேட் வெஸ்டன் தோட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் வேலுப்பிள்ளை, பெருமாள் லெட்சுமன், பெருமாள் மயில்வாகனம், பெருமாள் பாகர், ராஜேந்திரன் குணசேகரன் ஆகிய ஐந்து பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

மேற்பட சந்தேக நபர்கள் லிந்துலை கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள சுப்பையா மாரிமுத்து என்பவரை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

இதனாலேயே 5 சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...