சுஷ்மா பதவி விலக கோரி தொடர்ந்து அமளி: 4ஆவது நாளாக பாராளுமன்றம் முடங்கியது | தினகரன்

சுஷ்மா பதவி விலக கோரி தொடர்ந்து அமளி: 4ஆவது நாளாக பாராளுமன்றம் முடங்கியது

 லலித்மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பதவி விலக கோரி பாராளு மன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு அவையை ஸ்தம்பிக்க செய்து வருகி றார்கள். நேற்;று பாராளுமன்றம் கூடியதும் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து லலித்மோடி விவகாரத்தையும், வியாபம் ஊழலை யும் கிளப்பினார்கள்.

இதற்கு பொறுப்பு ஏற்று சுஷ்மா சுவராஜ் , முதல் - மந்திரிகள் வசுந்தரா ராNஜ, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலககோரி குரல் எழுப் பினார்கள். உடனே பா.ஜனதா எம்.பி.க்கள் பதிலுக்கு காங்கிரஸ் முதல் - மந்திரிகள் மீதான ஊழல் பற்றி பேசினார்கள். இதனால் அவையில் கடும் கூச்சல் அமளி நிலவியது. அவர்களை சபாநாயகர் சுமத்ரா மகாஜன் அமைதிப்படுத்த முயன்றார். என்றாலும் பயன் இல்லை. அமளி நீடித்தது.

இதையடுத்து சபையை வருகிற திங்கட்கிழமை காலை 11 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதன் காரணமாக நேற்று 4-வது நாளாக அவை நடவடிக்கைகள் எதுவும் நடைபெற முடியாமல் முடங்கியது. இதே போல் மேல் - சபையிலும் லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல் பிரச்சினை பற்றி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேசினார்கள். அவர்களுக்கு துணைத் தலைவர் குரியன் அனுமதி மறுத்தார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகு அவை கூடியதும் மீண்டும் இதே பிரச்சினையால் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 2-வது முறையாக ஒத்தி வைக்கப் பட்டது. பின்னர் உள்துறை மந்திரி ராஜ் நாத் சிங் நிருபர்களிடம் கூறுகையில், பாராளுமன்றத்தில் நாங்கள் எந்த பிரச்சினை பற்றியும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். அதற்கு காங்கிரஸ் தயா ராக இல்லை. பாராளுமன்றத்தை முடக்குவதி லேயே குறியாக இருக்கிறார்கள் என்றார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று சுஷ்மா சுவராiஜ கடுமையாக தாக்கிப் பேசினார். மந்திரியாக இருந்து கொண்டு குற்றச் செயலில் ஈடுபட்டார். அவர் சிறைக்கு செல்ல வேண் டும் என்றார். அவரது இந்த பேச்சுக்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி கண்டனம் தெரிவித்தார்.

இது பற்றி கட்காரி நிருபர்களிடம் கூறுகையில், ஹராகுல் காந்தி எல்லை மீறி சுஷ்மா சுவராiஜ விமர்சித்துள் ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ராகுல் காந்தி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்' என்றார்.

இதற்கிடையே பாராளுமன்றம் முடக் கத்தை கண்டித்தும் காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்ட் மாநில முதல் - மந்திரி ஹரீஸ் ரவாத் மீதான ஊழலை கண்டித்தும் அவர் பதவி விலகக் கோரியும் பா.ஜனதா எம்.பி.க்கள் பாரா ளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

உத்தரகாண்ட் வெள்ள நிவாரண ஊழல், மதுபான ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கையில் கோரிக்கை அட்டை வைத்திருந்தனர்.

மதியத்திற்குப் பிறகு மாநிலங்களவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை திங் கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. 4-வது நாளாக பாராளுமன்றப் பணிகள் முடங்கின.


Add new comment

Or log in with...