21 ஆவது கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னைய்யா நியமனம் | தினகரன்

21 ஆவது கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னைய்யா நியமனம்

 
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னைய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கிழக்கு கடற்படை தளபதியாக செயற்பட்ட இவர், இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக ஜனாதிதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
1982 இல் கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னைய்யா, கடற்படை கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட அவர், விடுதலைப் புலிகளுடனான கடற்படை தாக்குதல்களின் போது செயற்பட்ட சிரேஷ்ட அதிகாரியாவார்.
 
தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கடந்த வருடம் (2015) ஜூலை மாதம் கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற, தற்போதைய வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக் காலம், கடந்த பெப்ரவரி 22 இல் ஜனாதிபதியினால் மேலும் 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
தற்போதைய பாதுகாப்பு படைகளின் பிரதானியான கிரிஷாந்த டி சில்வா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) ஓய்வு பெறவுள்ளார் என்பதோடு, அவருக்கு இராஜதந்திரி பதவியொன்று வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 

Add new comment

Or log in with...