முன்னாள் பிரதியமைச்சர் தருவித்த எதனோல் கொள்கலனுக்கு ‘சீல்’ | தினகரன்

முன்னாள் பிரதியமைச்சர் தருவித்த எதனோல் கொள்கலனுக்கு ‘சீல்’

 மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவர் தருவித்த எதனோல் கொள்கலன் ஒன்று சுங்கப் பிரிவினால் கைப்பற் றப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இதற்கான அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப் பிட்டார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் சுங்கப் பிரிவின் வருமானம் அதிகரித்துள்ளது. சுங்க வருமானம் 6700 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. இலங்கைக்கு தருவிக்கப்படும் சகல பொருட்களுக்கும் சுங்க வரி அறவிடப்படுகிறது.

270 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த எதனோல் கொள்கலன் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இரு கொள்கலன்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

சுங்க நடவடிக்கைகளை செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்காக கொள்கலன் ஸ்கென் முறையொன்றை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனூடாக எதனோல், போதைப் பொருட்கள் என்பன சட்டவிரோதமாக எடுத்து வருவதை கண்டுபிடிக்க முடியும்.

முன்னாள் ஜனாதிபதி மாத்தளைக்கு சென்றால் குறித்த பிரதி அமைச்சரின் வீட்டில் தான் தங்குவார் என்றார்.


Add new comment

Or log in with...