ஐ.ம.சு.மு செயலருக்கு எதிராக வழக்கு தொடர அமைச்சரவை அனுமதி | தினகரன்

ஐ.ம.சு.மு செயலருக்கு எதிராக வழக்கு தொடர அமைச்சரவை அனுமதி

 கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக போக்குவரத்து மற்றும் ஊடக அமைச்சு என்பவற்றின் கீழ் உள்ள நிறுவனங்களை பயன்படுத்தி அதற்காக பணம் வழங்காததற்கு எதிராக ஐ.ம.சு.மு. செயலாளருக்கு எதிராக வழக்கு தொடர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்பித்தார். பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் முன்னாள் ஜனாதிபதிக்குமிடையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடத்திய சந்திப்பிற்காக 8.2 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அரசியல் கூட்டங்களுக்காக மக்களை எடுத்து வர இ.போ.ச. பஸ்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 50 மில் லியன் முற்பணம் செலுத்தப்பட்டது. இதுவரை 142.5 மில்லியன் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான பற்றுச் சீட்டுகள் ஐ.ம.சு.மு. செயலாளருக்கு சமர்பிக்கப்பட்ட போதும் பணம் செலுத்தப் படவில்லை.

இ.போ.ச.வுக்கு சொந்தமான சாலிகா மண்டபம் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதோடு அதன் மதில் சுவர், மைதானம் என்பன இதனால் சேதமடைந்துள்ளன. எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. இவற்றுக்கான பணத்தை செலுத்ததாதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்ரசவை அனுமதி வழங்கியது.

அரச ஊடக நிறுவனங்களினுடாக தேர்தல் பிரசார விளம்பரங்கள் மேற் கொள்ளப்பட்டு அதற்கு பணம் செலுத்து வதற்கு எதிராக வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...