இதேதேர்தல் முறை தொடர்ந்தால் குடுகாரர்களும் எதனோல்காரர்களுமே நாட்டின் கொள்கைகளை வகுப்பர் | தினகரன்

இதேதேர்தல் முறை தொடர்ந்தால் குடுகாரர்களும் எதனோல்காரர்களுமே நாட்டின் கொள்கைகளை வகுப்பர்

 இன்றுள்ள தேர்தல் முறை தொடர்ந்தால் இன்னும் பத்து வருடத்தில் ‘குடு’காரர்களும் எத்தனோல் காரர்களுமே பாராளுமன்றத்தை நிரப்புவர் எனவும் அவர்களாலேயே நாட்டுக்கான கொள் கைகள் வகுக்கப்படும் என்றும் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான ஆட்சியில் ஊழல்கள் ஒழிக்கப்பட்டு, அமைச்சரவை எண்ணிக்கை குறைக்கப்பட்டு தேர்தல் முறை மாற்றம் ஏற்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் இதற்காக இன, மத, கட்சி பேதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பிரதமர் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய தேரர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இந்த நாட்டை இரண்டு பிரதான கட்சிகளே ஆட்சி செய்தன. தாம் தேர்தலில் வெற்றிபெற்று எதைச் செய்யப் போகின்றோம் என்பதை இன்று ஐக்கிய தேசியக் கூட்டணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றது.

இருபெரும் கட்சிகளின் தொடர்ந்த ஆட்சி தட்டுமாறும் ஆட்சியாகவே இருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சி தமது ஆட்சிக் காலத்தில் செய்தவையே மக்கள் அக் கட்சியை நிராகரிக்க காரணமாகியது.

பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எட்டு வருடத்திற்கு மேல் ஆட்சிசெய்து மக்கள் அதனையும் நிராகரித்துவிட்டனர். இதுபோன்ற தட்டுமாறும் நிலையே தொடர்ந்தது.

இந்த தட்டு மாற்ற முறையை இல்லாதொழித்து புதிய பயணத் திற்கான எதிர்பார்ப்பையே மக்கள் கொண்டுள்ளனர். மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கின்றனர்.

நல்லாட்சிக்கான ஆரம்பத்தை நாம் ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தினோம். நாட்டு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி இன, மத. பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கையை ஏற்றனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல், 17வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி ஊழலை இல்லாதொழிப்பது, சிறந்த தேர்தலை நடத்துவது என பல விடயங்கள் இடம்பெறுகின்றன.

தேர்தல் ஆணையாளருக்கு அதற்கான சகல வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட வேண்டும்.

தகவல் அறியும் சட்டம், கணக்காய்வுச் சட்டம். எமக்கு அவசியம்.

இவை முறையாக இடம்பெறும் போது இயல்பாகவே நல்லாட்சி உருவாகும். அத்துடன் இன்றுள்ள ஊழல் நிறைந்த தேர்தல் முறை மாற்றப்படுவது முக்கியம்.

இவை நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.

இல்லாவிட்டால் இன்னும் 10 வருடத்தில் பாராளுமன்றத்தை ‘குடு காரர்’களும் எத்தனோல்காரர்களுமே நிரப்புவர். அவர்களே நாட்டிற்கான கொள்கைகளையும் உருவாக்குவர்.

அந்த மோசமான நிலையைத் தடுக்க வேண்டுமானால் எமது இந்த நல்லாட்சிக்கான பயணம் தொடர வேண்டும்.

இப்போதாவது எமது பொருளாதாரம் சரியாக புடம் போடப்பட வேண்டும். சுவீப் விற்று, கசினோ நடத்தி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. முறையான பொருளாதார திட்டம் எமக்கு அவசிய மாகிறது.

எமக்கு முறையான தொழில் வாய்ப்புத் திட்டங்கள் இருந்தால் ஏன் எமது நாட்டவர் கொரியாவுக்கும், மத்திய கிழக்குக்கும் போகப் போகின்றனர்? உயிரைப் பணயம் வைத்து ஏன் அவுஸ் திரேலியா போகிறார்கள்? இங்கு வாழ்வ தற்கான முறை வகுக்கப்பட வில்லை என்பதாலேயே என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)


Add new comment

Or log in with...