ஜனாதிபதியுடன் பேச்சு; போராட்டத்தை கைவிட்டனர் பெற். ஊழியர்கள் (UPDATE)

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, தாம் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என பெற்றோலிய தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
 
கடந்த செவ்வாய்க்கிழமை (25) பெற்றோலிய தொழிற் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்களை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு இன்றைய தினம் (01) அழைத்திருந்தார்.
 
இதனையடுத்து, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை முடியும் வரை தாங்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து சங்கத்தின் இணைப்பாளர் டீ.ஜே. ராஜகருணா தெரிவிக்கையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை, அமைச்சரவை அனுமதிக்கு முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்
 

மன்றில் ஆஜரான 16 பெற்றோலிய ஊழியர்களுக்கும் பிணை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் 16 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
 
பெற்றோலிய ஊழியர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையின் போது (25) அத்தியவசிய சேவைக்கு இடைஞ்சல் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த 26ம் திகதி கைதுசெய்யப்பட்ட குறித்த 16 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
 
குறித்த நபர்களை நேற்றைய தினம் (31) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணித்திருந்த நிலையில் அவர்கள் நீதிமன்றிற்கு சமூகமளித்திருக்கவில்லை.
 
இதனையடுத்து, கொழும்பு மேலதிக நீதவானினால் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட 16 பேருக்கும் பிடியாணை உத்தரவு வழங்கியிருந்த நிலையில், இன்றைய தினம் (01) அவர்கள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
 
இதன்போது குறித்த நபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை கருத்திற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான், அவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
 

Add new comment

Or log in with...