சுமார் 200,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் | தினகரன்

சுமார் 200,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில்

சுமார் 2 இலட்சம் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக செயலகம் அறிவித்துள்ளது.

சுமார் ஒர இலட்சத்து 20 ஆயிரம் பேர் வாக்களிப்பு கடமைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், 75 ஆயிரம் பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மட் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் வாக்கெடுப்பு நிலையங்களுக்காக சுமார் 25 ஆயிரம் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 


Add new comment

Or log in with...