தஞ்சக் கோரிக்கை: இலங்கை இரண்டாமிடம் | தினகரன்

தஞ்சக் கோரிக்கை: இலங்கை இரண்டாமிடம்

சுவிற்சலாந்தில் தமக்கு தஞ்சம் வழங்குமாறு கோரிய விண்ணப்பங்களின் அடிப்படையில் இலங்கை இரண்டாமிடத்தை பெற்றுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

கடந்த 06 மாதங்களில் இலங்கையிலிருந்து மாத்திரம் இவ்வாறான சுமார் 840 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் 3800 விண்ணப்பங்களை அனுப்பியதன் மூலம் எரித்திரியா, அதிக விண்ணப்பங்களை அனுப்பிய நாடாகக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தஞ்சக் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்டுள்ள மொத்த விண்ணப்பங்கள் சுமார் 11,000 இற்கும் அதிகம் என அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றது.
 


Add new comment

Or log in with...