ஐஎஸில் இணைந்த இலங்கை அதிபர் பலி | தினகரன்

ஐஎஸில் இணைந்த இலங்கை அதிபர் பலி

சிரியாவின் ஐஎஸ் தீவிரவாத குழுவில் இணைந்து பணியாற்றியதாக கூறப்படும் இலங்கையர் தாக்குதல் ஒன்றில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட நபர் கலேவலவைச் சேர்ந்த சர்வதேச பாடசாலை ஒன்றில் அதிபராகக் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட நபரின் புகைப்படத்துடன், அவர் கடந்த வாரம் தாக்குதலுக்குள்ளாகி மரணமானதாக தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 37 வயதான இலங்கையைச் சேர்ந்த இவர் ஐஎஸ்ஸினால் அபு சிலானி என அழைக்கப்பட்டார் எனவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.

அபூசுரைஹ் ஸைலானி எனும் பெயரைக் கொண்ட குறித்த நபர் கண்டி, வெரலகமவைச் சேர்ந்தவர் எனவும் அவரது மனைவி கொழும்பில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடமையாற்றிய பாடசாலையிலிருந்து கடந்த 2014 டிசம்பரில் பணியிலிருந்து விலகிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
 


Add new comment

Or log in with...