கொழும்பில் ஜப்பானிய கடற்படை கப்பல்கள் | தினகரன்

கொழும்பில் ஜப்பானிய கடற்படை கப்பல்கள்

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான ‘அகிசுகி’, ‘சவாகிரி’ எனும் இரு கப்பல்கள் நேற்று (19) கொழும்புத் துறைமுகத்திற்கு வந்திருந்தது. அக்கப்பல்கள் இலங்கை கடற்படையினரால் கலாசார ரீதியில் வரவேற்பளிக்கப்பட்டது. 

கொழும்பிலுள்ள மேற்கு கடற்படை கட்டளைத்தளத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமெரிக்க தூதுவரக அதிகாரிகள் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இரு நாட்டு தொழில்நுட்ப மற்றும் பயிற்சிகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் குறிப்பிட்ட இரு ஜப்பானிய கடற்படை கப்பல்களும் இலங்கை கடற்படைக் கப்பல்களுடன் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விரு கப்பல்களும் இன்று (20) இங்கிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான ‘அகிசுகி’, ‘சவாகிரி’ எனும் இரு கப்பல்கள்
 


Add new comment

Or log in with...