தேர்தல் முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் | தினகரன்


தேர்தல் முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள்

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைச் செய்ய தேர்தல் ஆணையாளரினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தனது இராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலக அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயெ இவ்வறிவித்தலை தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான பிழையான நடவடிக்கைகள், சட்டவிரோத விடயங்கள் தொடர்பில் மக்கள் தங்களது முறைப்பாடுகளை செய்யும் வகையில் மூன்று தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 0112 887756, 0112 887759, 0112 877631 ஆகிய இலக்கங்களே அவையாகும்.

அத்துடன் 0112 887717 மற்றும் 0112 877636 எனும் இரண்டு தொலைநகல் இலக்கங்களும் இதற்கென அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...