கொழும்பு - பதுளை புகையிரத சேவை வழமைக்கு | தினகரன்

கொழும்பு - பதுளை புகையிரத சேவை வழமைக்கு

 
கொட்டகலை "60 அடி" பாலத்தின் திருத்த பணிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையில் கொழும்பு பதுளை புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.
 
 
கொழும்பு பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110 வது மைல் கட்டைப்பகுதியில் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் புகையிரதப் பெட்டிகள் நான்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. 
 
 
இவ்விபத்தில் புகையிரத பெட்டிகளுக்கும்  தண்டவாளங்களுக்கும் 60 அடி பாலத்திற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
 
கடந்த ஆறு நாட்களாக இரவு பகலாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களின் முயற்சியால் அது சீர் செய்யப்பட்டு, இன்று (20) காலை 11.00 மணியளவில் பரீட்சார்த்த புகையிரதம் செலுத்தப்பட்டு புனரமைப்பு நடவடிக்கைகள் உறுதிசெய்யப்பட்டதன் பின், இப்பாலத்தின் ஊடாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமும், கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதமும் பயணித்தது. 
 
 
அதனைத் தொடர்ந்து புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 
(ஹட்டன் சுழற்சி, விசேட நிருபர்கள்)
 
 

Add new comment

Or log in with...